/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துப்பாக்கியுடன் சட்டசபைக்கு வந்த நரிக்குறவர்களால் பரபரப்பு
/
துப்பாக்கியுடன் சட்டசபைக்கு வந்த நரிக்குறவர்களால் பரபரப்பு
துப்பாக்கியுடன் சட்டசபைக்கு வந்த நரிக்குறவர்களால் பரபரப்பு
துப்பாக்கியுடன் சட்டசபைக்கு வந்த நரிக்குறவர்களால் பரபரப்பு
ADDED : நவ 06, 2024 07:10 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை வளாகத்திற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்களை பார்பதற்காக தினமும் ஏரளான பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இவ்வாறு சட்டசபை வளாகத்திற்கு வரும் பொது மக்களை சட்டசபை காவலர்கள் சோதனை செய்து உள்ளே அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை 10க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் துப்பாக்கிகளுடன் சட்டசபைக்கு வந்தனர். அவர்களை சட்டசபை காவலர்கள் தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அதற்கு அவர்கள், முதல்வரை சந்திக்க வந்துள்ளதாகவும், தங்களுக்கு நலத்திட்டத்திற்கான டோக்கன் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பின்னர், அவர்கள் வைத்திருந்த 2 துப்பாக்கிகளை வாங்கி கொண்ட காவலர்கள், அவர்களிடம் இருந்த பைகள் அனைத்தையும் முழுமையாக பரிசோதித்த பின், முதல்வரை சந்திக்க அனுமதித்தனர்.
இச்சம்பவத்தினால், சட்டசபை வளாகத்தில் சற்ற நேரம் பரபரப்பு நிலவியது.