/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சென்டர் மீடியன் இல்லாததால் கடலுார் சாலையில் திக்... திக்... பயணம்
/
சென்டர் மீடியன் இல்லாததால் கடலுார் சாலையில் திக்... திக்... பயணம்
சென்டர் மீடியன் இல்லாததால் கடலுார் சாலையில் திக்... திக்... பயணம்
சென்டர் மீடியன் இல்லாததால் கடலுார் சாலையில் திக்... திக்... பயணம்
ADDED : அக் 27, 2024 04:41 AM

புதுச்சேரி - கடலுார் சாலையில் வாகன போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. விபத்துக்களை தடுக்கும் வகையில், பொதுப்பணித்துறை தேசிய நெடுஞ்சாலை பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முள்ளோடை, கன்னியக்கோவில், காட்டுக்குப்பம், தவளக்குப்பம் மற்றும் தமிழக பகுதியான பெரிய காட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதியில், சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
ஆனால், பிள்ளையார்குப்பம் சந்திப்பு முதல் ரெட்டிச்சாவடி சந்திப்பு வரையிலான சுமார் 3 கி.மீ., துாரத்திற்கு சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்படாமல் திறந்த வெளியாக உள்ளது. குறிப்பாக, இந்த பகுதியில் மருத்துவ கல்லுாரி, மருத்துவமனை, செவிலியர் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி, பெட்ரோல் பங்க், போலீஸ் நிலையம், கோவில்கள் உள்ளதால், பொது மக்கள் அடிக்கடி சாலையை கடக்கும் நிலை இருந்து வருகிறது. சென்டர் மீடியன் இல்லாததால், தாறுமாறாக அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து அபாயம் இருந்து வருகிறது.
எனவே, பிள்ளையார்குப்பம் சந்திப்பு முதல் ரெட்டிச்சாவடி வரையில் சென்டர் மீடியன் அமைக்க, நெடுஞ்சாலை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.