/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர்கள் வைத்தால் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்: பிரிண்டிங் கடைகளுக்கும் அரசு கடிவாளம்
/
பேனர்கள் வைத்தால் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்: பிரிண்டிங் கடைகளுக்கும் அரசு கடிவாளம்
பேனர்கள் வைத்தால் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்: பிரிண்டிங் கடைகளுக்கும் அரசு கடிவாளம்
பேனர்கள் வைத்தால் மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம்: பிரிண்டிங் கடைகளுக்கும் அரசு கடிவாளம்
ADDED : செப் 27, 2024 05:10 AM

புதுச்சேரி: சாலைகளில் வைக்கும் சட்ட விரோத பேனர்களை முறைப்படுத்தும் வகையில் பல்வேறு அதிரடிமுடிவுகளை எடுத்து புதுச்சேரி நகராட்சி வரைவு விதிகளை வெளியிட்டுள்ளது. பேனர்கள் வைப்பவர்கள்மூன்றாம் நபர் காப்பீடு கட்டாயம் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரியில் அதிகரித்துள்ள முகம் சுளிக்கும் சட்ட விரோத பேனர் கலாசார விஷயத்தில் புதுச்சேரி கோர்ட் மீண்டும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக புதுச்சேரி தலைமை நீதிபதி, சென்னை ஐகோர்ட்டிற்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கிடையில் ஐகோர்ட் உத்தரவின்படி, புதுச்சேரி நகர சாலைகளில் பேனர்களை வைப்பதை ஒழுங்குப்படுத்த புதுச்சேரி நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக வரைவு விதிகளை பல்வேறு திருத்தங்களுடன் கொண்டு வந்துள்ளது.
பிரிண்டிங்கடைகளுக்கு செக்
பேனர்கள் அச்சடிக்கும்போது, அதை பிரிண்ட் செய்யும், பிரிண்ட்டிங் கடைகளின் பெயர்கள் இடம் பெறுவதே இல்லை. இனி, பேனர்கள் அச்சடிக்கும்போது, அதன் கீழ்ப்பகுதியில் பேனர் அனுமதி அளிக்கப்பட்ட நாள், அனுமதி எண், அனுமதி அளிக்கப்பட்ட அளவின் விவரம் மற்றும் அனுமதி வழங்கப்பட்ட கால அவகாசம், பேனர் தயார் செய்த கடையின் பெயர் கட்டாயம் இடம் பெற வேண்டும்.
நகராட்சியின் அனுமதி பெறாத பேனர்களை அச்சடித்தால் பிரிண்டிங் கடைகளில் வர்த்தக உரிமம் சப் டிவிஷனல் மாஜிஸ்திரேட் மூலம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இன்சூரன்ஸ் கட்டாயம்
அரசு இடங்களில் அரசு அனுமதியுடன் பேனர்கள், விளம்பரதட்டி வைக்கின்றனர். அப்படி வைக்கும்போது அவை கீழே விழுந்து உயிரிழப்பு, விபத்துகள் நடந்தால் யார் பொறுப்பேற்று நிவாரணம் வழங்குவது என கேள்வி எழுந்தது. அதற்கு தீர்வு காணும் வகையில் அரசு அனுமதியுடன் சாலையில் விளம்பர தட்டி வைக்கும் நிறுவனங்கள் மூன்றாம் நபர் காப்பீடு திட்டம் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என புதிய விதிகளில் அதிரடியாக தெரிவித்துள்ளது.
25 சதவீதம் கூடுதல் அபராதம்
புதிய விதியில் சட்ட விரோத பேனர்களை அகற்ற நகராட்சி ஆணையருக்கு முழு பவர் கொடுக்கப்பட்டுள்ளது. சட்ட விரோத பேனர்கள் கட்டடம், நிலம், மனைகளில் இருந்தால், அந்த விளம்பரத்தை அகற்றிவிட்டு, அதற்கான செலவும் தனியார் நிலம் மற்றும் குத்தகைதாரர் உட்பட நிலத்தின் உரிமையாளரிடமிருந்து அல்லது ஆக்கிரமிப்பாளரிடமிருந்து வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய அங்கீகரிக்கப்படாத விளம்பரம் அமைத்தவர்களுக்கு இது முதல் வாரத்திற்கு அனுமதி கட்டணத்தை விட இரண்டு மடங்கு அபராதம் விதிக்கப்படும்.
இந்த கட்டணம் கட்டட உரிமையாளர் அல்லது ஆக்கிரமிப்பாளரால் செலுத்த வேண்டும். அப்படியும் சட்ட விரோத பேனர்தள எடுக்காமல் வைத்திருந்தால் ஒவ்வொரு கூடுதல் வாரத்திற்கும் 25 சதவீதம் கூடுதலாக அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த வரைவு விதிகளில் ஆட்சேபனைகளில் நகராட்சி வரவேற்றுள்ளது.