/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
சீனிவாச பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 15, 2024 06:40 AM

புதுச்சேரி : முதலியார்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் நடந்த திருக்கல்யாண நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
முதலியார்பேட்டை சீனிவாச பெருமாள் கோவிலில் ம ேஹாத்ஸவ நிகழ்ச்சியையொட்டி, திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. கடந்த 12 ம் தேதி இரவு, 7:00 மணி முதல் 9:30 மணி வரை, சீனிவாச பெருமாள் - ஆண்டாள் நாச்சியார் ஆகிய இருவருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
இந்த நிகழ்ச்சியில், முதலியார்பேட்டை முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.