/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திண்டிவனம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம்
/
திண்டிவனம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம்
திண்டிவனம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம்
திண்டிவனம் ஸ்ரீநிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : பிப் 22, 2024 11:44 PM
புதுச்சேரி: புதுச்சேரியில், திண்டிவனம் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு திருக்கல்யாண உற்சவத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அலமேலு மங்கா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் மாசிமகக் கடல் தீர்த்தவாரி கமிட்டியின் தலைவர் பொன்னுரங்கம் நேற்று அளித்த பேட்டி:
புதுச்சேரியில் நடக்கும் மாசிமகக் தீர்த்தவாரிக்காக திண்டிவனம் நல்லியக்கோடன் நகரில் உள்ள அலமேலு மங்கா சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள் இன்று 23ம் தேதியன்று புதுச்சேரிக்கு வருகிறார். இன்று மாலை 5:30 மணிக்கு, நுாறு அடி சாலையில் உள்ள சிருங்கேரி மடம் சாரதாம்பாள் திருக்கோவிலில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு திருமஞ்சனம் , சிறப்பு அலங்காரத்துடன் புறப்பாடாகி, அம்பலத்தாடையார் மடத்து வீதியில் உள்ள வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தை வந்தடைகிறார்.
தொடர்ந்து, நாளை காலை, வைத்திக்குப்பம், கடல் தீர்த்தவாரிக்கு சுவாமி எழுந்தருள உள்ளார். மேலும் இரவு 7:00 மணிக்கு, திருமண மண்டபத்தில் சிறப்பு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.
வடமுகத்து செட்டியார் திருமண மண்டபத்தில், நாளை மறுநாள் 25ம் தேதி காலை 10:30 மணிக்கு மண்டபத்தில் திருக்கோவிலுார், ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் மடாதிபதி, 26ம் பட்டம் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், திருக்கல்யாண வைபவம் நடக்க உள்ளது. விழாவில் அனைவரும் பங்கேற்குமாறு அழைக்கிறோம்.
அன்றைய தினம் மாலை 6:00 மணிக்கு சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. வரும், 26ம் தேதி, காலை 10:00 மணிக்கு, உலக நன்மைக்காக, மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது.
இவ்வாறு, பொன்னுரங்கம் தெரிவித்தார்.
கமிட்டி பொருளாளர் முனிசாமி, செயலாளர் சிவானந்தம், நடராஜன், கிருஷ்ணசாமி, தேவநாதன், வெங்கடாசலபதி, துரை உடனிருந்தனர்.