/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திண்டிவனம் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண வைபவம்
/
திண்டிவனம் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண வைபவம்
திண்டிவனம் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண வைபவம்
திண்டிவனம் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் திருக்கல்யாண வைபவம்
ADDED : பிப் 26, 2024 05:11 AM

புதுச்சேரி: திண்டிவனம் சீனிவாச பெருமாளுக்கு புதுச்சேரியில் நடந்த திருக்கல்யாண வைபவத்தில் ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.
புதுச்சேரியில் நடந்த மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்க திண்டிவனம், நல்லியக்கோடன் நகரில் உள்ள அலுமேலு மங்கா சமேதா சீனிவாச பெருமாள், கடந்த 23ம் தேதி புதுச்சேரி வந்தார். நேற்று முன்தினம், காலை வைத்திக்குப்பம் கடற்கரையில் நடந்த தீர்த்தவாரியில் சுவாமி எழுந்தருளினார்.
அதையடுத்து, புதுச்சேரி வட முகத்து செட்டியார் திருமண மண்டபத்தில், மாசி மக கடல் தீர்த்தவாரி கமிட்டி சார்பில், நேற்று காலை 10:30 மணிக்கு, திருக்கோவிலுார் ஜீயர் மடாதிபதி, 26ம் பட்டம் ஜீயர் சுவாமிகள் முன்னிலையில், சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தனர். கமிட்டி தலைவர் பொன்னுரங்கம், பொருளாளர் முனிசாமி, செயலாளர் சிவானந்தம், நடராஜன், கிருஷ்ணசாமி, தேவநாதன், வெங்கடாசலபதி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
மாலை 6:00 மணிக்கு, சேஷ வாகனத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இன்று 26ம் தேதி காலை 10:00 மணிக்கு உலக நன்மை வேண்டி மகா சுதர்சன ேஹாமம் நடக்கிறது.

