/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாநில ஆணழகன் போட்டி திருக்கனுார் வீரர்கள் வெற்றி
/
மாநில ஆணழகன் போட்டி திருக்கனுார் வீரர்கள் வெற்றி
ADDED : நவ 27, 2024 11:25 PM

திருக்கனுார் : திருக்கனுார் நியூ குலோப் ஜிம் வீரர்கள் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
புதுச்சேரி ஐ.பி.பி.எ., ஆப் இந்தியா பாடி பில்டர் சங்கம் சார்பில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடந்தது. உப்பளம் ராஜிவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியில் திருக்கனுார் நியூ குலோப் ஜிம் மூலம் 4 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
அதில், மாஸ்டர் பிரிவில் தங்கப் பதக்கமும், 55 கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கமும், ஜூனியர் பிரிவில் 4 மற்றும் 5ம் இடத்தையும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற வீரர்களை திருக்கனுார் நியூ குலோப் ஜிம் நிர்வாகி கந்தன், மேலாளர் தனிஷ் ஆகியோர் பாராட்டினர்.