/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்கனுார் மாணவர்கள் மல்லர் கம்பம் போட்டியில் சாதனை
/
திருக்கனுார் மாணவர்கள் மல்லர் கம்பம் போட்டியில் சாதனை
திருக்கனுார் மாணவர்கள் மல்லர் கம்பம் போட்டியில் சாதனை
திருக்கனுார் மாணவர்கள் மல்லர் கம்பம் போட்டியில் சாதனை
ADDED : செப் 04, 2025 02:43 AM

திருக்கனுார் : கேரளாவில் நடந்தது மாநிலங்களுக்கு இடையேயான மல்லர் கம்பம் போட்டியில் சாம்பியன்ஷிப் பெற்ற புதுச்சேரி மாணவர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
கேரள மாநிலம், பாலக்காடு, மீனாட்சிபுரத்தில் 12வது மாநிலங்களுக்கு இடையேயான மல்லர் கம்பம் போட்டிகள் கடந்த 31ம் தேதி நடந்தது. புதுச்சேரி மாநிலம் சார்பில், பங்கேற்ற திருக்கனுார் போன் நேரு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அஸ்வின் ராகுல், கமலேஷ் ஆகியோர் ஆண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களையும், பெண்கள் பிரிவில் சாதனா, தமிழினியா முதல் இரண்டு இடங்களையும் பெற்றனர்.
இதன் மூலம் மாநிலங்களுக்கு இடையேயான மல்லர் கம்பம் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதனை படைத்தனர். அவர்கள், அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பள்ளியின் தாளாளர் ஜானகிராமன், பயிற்சியாளர் பரணிதரன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.