UPDATED : நவ 24, 2026 05:20 PM
ADDED : நவ 24, 2026 05:20 PM

பாகூர்: சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில், திருக்குறள் திருவிழா நடந்தது.
புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் நல்லாசிரியர் வெற்றிவேல் தலைமை தாங்கி, திருக்குறளில் அறிவுடைமை என்னும் பொருளில் சிறப்புரை ஆற்றினார். மண்டல அமைப்பாளர் ஆசிரியை குழலி வரவேற்றார். கல்லுாரி மாணவி தீபிகா நோக்கவுரையாற்றினார். மாணவிகள் திவாஷினி, தேஜா, தாரணி, பத்மஸ்ரீ, ஹேமலா, பூஜா, தர்ஷிகா, சுடர்தேவி, கனிஷ்கா ஆகியோர் உலகப் பொதுமறை திருக்குறள் என்னும் தலைப்பில் கருத்துரையாற்றினர்.
மாணவிகள் ரக்ஷிதா, ரோஷிகா, மோகனப்பிரியா, சண்முகப்பிரியா, சோபியா, சாதனா, கார்த்திகா, கிருத்திகா, சரினா ஆகியோர் திருக்குறளும் வாழ்வியலும் என்னும் தலைப்பில் கலந்துரையாடினர். விழாவில், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. மண்டல அமைப்பாளர் ஹேமலட்சுமி அழகிரி நன்றி கூறினார்.
