புதுவை தமிழ்சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
புதுவை தமிழ்சங்கத்தில் திருக்குறள் கூறும் நிகழ்ச்சி
UPDATED : அக் 22, 2026 07:46 PM
ADDED : அக் 22, 2026 07:44 PM

புதுச்சேரி: புதுவை தமிழ் சங்கத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறும் நிகழ்ச்சிக்கு நடந்தது.
புதுவை தமிழ்சங்கத் தலைவர் முனைவர் முத்து தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பளராக திருச்சி எழுத்தாளர் குறள் இனிது சோம வீரப்பன் பங்கேற்று திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து திருக்குறள் கூறினார். நிகழ்ச்சியில், தமிழ் சங்க செயலாளர் மோகன்தாஸ், முன்னாள் எம்.எல்.ஏ., இளங்கோ, புதுவை தமிழ் சங்க பொருளாளர் பாலசுப்பிரமணியன், துணைத்தலைவர் திருநாவுக்கரசு, ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அருள்ராஜ், கலைமாமணி ராஜா, சிவேந்திரன், ஆனந்தராசன், விஜயகுமார், செந்தில் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கப்பட்டது.
