தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மனைவியிடம் பணம் பறித்து கொடுமை படுத்திய கணவர் உட்பட மூவர் கைது

மனைவியிடம் பணம் பறித்து கொடுமை படுத்திய கணவர் உட்பட மூவர் கைது

மனைவியிடம் பணம் பறித்து கொடுமை படுத்திய கணவர் உட்பட மூவர் கைது


UPDATED : அக் 22, 2026 07:46 PM

ADDED : அக் 22, 2026 07:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 22, 2026 07:46 PM ADDED : அக் 22, 2026 07:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரி இளம்பெண்ணை திருமணம் செய்து கொடுமைபடுத்திய கணவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி புதுசாரம் பகுதியை சேர்ந்தவர் லாவண்யா,33; ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். இவருக்கும் திருப்பூர் காங்கேயத்தை சேர்ந்த அப்துல் பாசித்,30; என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அப்துல் பாசித்தின் தாய் பாத்திமா, மற்றும் அவரது தம்பி, முகமது ரபிக் ஆகியோர் தொழில் மற்றும் கடன் தேவைகளுக்காக லாவண்யாவிடம் பணம் கேட்டுள்ளனர்.

லாவண்யாவும் கொஞ்சம், கொஞ்சமாக அவர்களது வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி உள்ளார். இதற்கிடையில் லாவண்யா கருவுற்றதையடுத்து, மயிலம் கோவிலில் அப்துல் பாசித் ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதற்கிடையில், அவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் திருப்பூரில் அப்துல் பாசித், சபியா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டது தெரியவந்துள்ளது. திருப்பூர் சென்ற லாவண்யாவை, அப்துல் பாசித் குடும்பத்தினர் கொடுமைபடுத்தி, மொத்தம் ரூ.77 லட்சம் வரை பணத்தை பறித்து கொண்டு வீட்டை விட்டு துரத்தி உள்ளனர்.

இது குறித்து லாவண்யா கொடுத்த புகாரின் பேரில், டிநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் அப்துல் பாசித், பாத்திமா, முகமது ரபிக் ஆகியோரை கைது செய்து காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us