/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
துணைத் தலைவராக திருமுருகன் நியமனம்
/
துணைத் தலைவராக திருமுருகன் நியமனம்
ADDED : ஜூலை 31, 2025 03:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: என்.ஆர். காங்., கட்சியின் துணை தலைவராக அமைச்சர் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்.ஆர். காங்., கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் தொகுதி அளவிலும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். கட்சியின் பல்வேறு அணிகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், கட்சி நிறுவனரான முதல்வர் ரங்கசாமி ஒப்புதலுடன், என்.ஆர். காங்., கட்சியின் மாநில துணைத் தலைவராக அமைச்சர் திருமுருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை, அக்கட்சியின் மாநில செயலாளர் ஜெயபால் தெரிவித்துள்ளார்.