/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
/
வரதராஜபெருமாள் கோவிலில் திருப்பாவை சொற்பொழிவு
ADDED : டிச 17, 2025 05:28 AM

புதுச்சேரி: காந்தி வீதி, வரதராஜப்பெருமாள் கோவிலில், மார்கழி மாத உற்சவத்தையொட்டி, மாதவாச்சாரியார் சுவாமிகள், திருப்பாவை சொற்பொழிவு ஆற்றினார்.
மார்கழி மாத உற்சவ விழாவையொட்டி, கோவிலில், நேற்று காலை 5:00 மணிக்கு திருப்பாவை பள்ளி எழுச்சி நடந்தது. தொடர்ந்து, நிகழ்ச்சியில் பங்கேற்ற மாதவாச்சார்யார் சுவாமிகள், திருப்பாவை சொற்பொழிவு ஆற்றினார்.
உற்சவர்களான பெருந்தேவி தாயார் சமேத வரதராஜப்பெருமாள் மற்றும் ஆண்டாள் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
தினமும், திருப்பாவை சொற்பொழிவு, வரும் 19ம் தேதி அனுமன் ஜெயந்தியையொட்டி, சிறப்பு பூஜை நடக்கிறது.
தொடர்ந்து, ஏகாதசியை முன்னிட்டு, 20ம் தேதி முதல், பகல் பத்து உற்சவம் துவங்குகிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

