/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருப்பாவை பாசுரம் ஒப்புவித்தல் போட்டி
/
திருப்பாவை பாசுரம் ஒப்புவித்தல் போட்டி
ADDED : ஜன 09, 2026 05:23 AM

வில்லியனுார்: வில்லியனுார் பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப்பெருமாள் கோவில், வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்றம் மற்றும் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் பவுண்டேஷன் ஆகியவை இணைந்து 9ம் ஆண்டு திருப்பாவை பாசுரம் ஒப்புவித்தல் போட்டியை நடத்தின.
வில்லியனூர் சங்கர்ஸ் வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடந்த போட்டியில் நடுவர்களாக சாந்தலட்சுமி, மங்கவரத்தம்மாள், குலசேகரன், தனசேகரன், ரகுராமன், துலபமணி ஆகியோர் செயல்பட்டனர். பக்தர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு திருப்பாவை ஒப்புவித்தனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக சுதர்சனம், திருவரசன், வில்லியனுார் பெருமாள் கோவில் நிர்வாக அதிகாரி சந்தானராமன், சங்கர்ஸ் வித்யாலயா முன்னாள் முதல்வர் சரஸ்வதி, லட்சுமி, பொதுப்பணித் துறை கண்காணிப்பாளர் கலியமுருகன், ரஜினிமுருகன், பரசுராமன் ஆகியோர், திருப்பாவை பாசுரம் ஒப்புவித்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற தலைவர் ராமன் நன்றி கூறினார்.

