
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : நெட்டப்பாக்கம் பொறையாத்தம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நெட்டப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பின்புறம் அமைந்துள்ள பொறையாத்தம்மன் கோவிலில், உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.
இதையொட்டி காலை 10.00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகள் நடந்தது. மாலை 6 மணிக்கு 108 பெண்கள் உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தங்களின் மன குறைகளை கலையவும் அம்மனுக்கு பூஜை செய்தனர்.
தொடர்ந்து மகா தீபாரதனை நடந்தது. இரவு 7.00 மணிக்கு பெண்கள் 108 திருவிளக்கு ஏற்றி பூஜை செய்தனர்.
தொடர்ந்து பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.