/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தனக்கு தானே 'முதல்வர்' மகுடம் அரசு கல்லுாரியில் தான் இந்த கூத்து
/
தனக்கு தானே 'முதல்வர்' மகுடம் அரசு கல்லுாரியில் தான் இந்த கூத்து
தனக்கு தானே 'முதல்வர்' மகுடம் அரசு கல்லுாரியில் தான் இந்த கூத்து
தனக்கு தானே 'முதல்வர்' மகுடம் அரசு கல்லுாரியில் தான் இந்த கூத்து
ADDED : பிப் 08, 2026 04:14 AM

புதுச்சேரியில் உள்ள பிரபல அரசு மகளிர் கல்லுாரி முதல்வர் விடுப்பில் சென்றால், அதே கல்லுாரியில் உள்ள பவுதிக பேராசிரியர், தற்காலிக முதல்வராக பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், இக்கல்லுாரியின் முதல்வர் கடந்த டிசம்பர் மாதம் ஓய்வு பெற்றார். ஆனால், அந்த பதவிக்கு, உயர்கல்வித்துறை இதுவரை யாரையும் நியமிக்கவில்லை.
இந்நிலையில், பவுதிக பேராசிரியருக்கு, முதல்வர் பதவி வழங்க கோரி முன்னாள் முதல்வர் கோப்பை உயர் கல்வித் துறைக்கு அனுப்பியுள்ளார். இந்த கோப்பின் மீது உயர்கல்வித்துறை இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இருப்பினும், அந்த பவுதிக பேராசிரியர் தனக்குத் தானே பதவி உயர்வு அளித்துக்கொண்டு முதல்வர் பணிகளை கவனித்து வருகிறார். உயர்கல்வித்துறை உத்தரவின்றி நீங்கள் முதல்வர் பணியை கவனிக்கக்கூடாது என சக பேராசிரியர்கள் கூறியதை அவர் கண்டு கொள்ளவில்லை.
இதனால் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் மற்றும் அமைச்சக ஊழியர்கள் என்ன செய்வது எனப் புரியாமல் தவித்து வருகின்றனர். இப்படி தான் இருக்கு நம்ம ஊரு உயர் கல்வித்துறை.