/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
/
தலைமை செயலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது
ADDED : ஜன 22, 2026 05:13 AM
புதுச்சேரி: புதுச்சேரி, பொதுப்பணித் துறையில் 2016ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட வவுச்சர் ஊழியர்கள், பணிநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் ஒருங்கிணைந்து மீண்டும் பணி வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள், உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி நேற்று தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் அறிவித்தனர்.இதையொட்டி, ஒருங்கிணைப்பாளர் தெய்வீகன் தலைமையில் ஊழியர்கள் அஜந்தா சிக்னல் அருகே ஒன்று திரண்டு தலைமை செயலகம் நோக்கி சென்றனர். அவர்களை பெரியக்கடை போலீசார் மிஷன் வீதி சந்திப்பு அருகே தடுத்து நிறுத்தியதால், வாக்குவாதம் தள்ளு முள்ளு ஏற்பட்டது.பின்னர், ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தியும், அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, 22 பெண்கள் உட்பட 60 பேரை போலீசார் கைது செய்தனர்.

