வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 மாற்று ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம்
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 12 மாற்று ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம்
ADDED : செப் 11, 2026 11:43 PM
புதுச்சேரி: வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் 12 மாற்று ஆவணங்களை காட்டி ஓட்டளிக்கலாம். இது குறுித்து மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து ஓட்டளிக்கலாம். வாக்காளர் அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் அடையாள சான்றாக 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.
அதன்படி, ஆதார் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் பணி அட்டை, வங்கி கணக்கு புத்தகங்கள், மருத்துவ காப்பிடு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, மாற்றுத்திறனாளி அடையாள அட்டை, பாஸ் போர்ட், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணங்கள், பணியாளர் அடையாள அட்டை, மத்திய, மாநில அரசு, பொது துறை நிறுவனங்கள் பொது வரையறுக்கப்பட்ட புகைப்படத்துடுன் கூடிய பணி அடையாள அட்டை உள்ளிட்ட 12 மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பித்து ஓட்டளிக்கலாம்.
பொதுமக்கள் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
