ADDED : மார் 20, 2025 04:50 AM

புதுச்சேரி: புதுச்சேரி பாரதிதாசன் அரசினர் மகளிர் கல்லுாரி, தமிழ்த்துறை சார்பில் சிந்தனைக்களம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
தமிழ்த்துறை மாணவி பிரியதர்ஷினி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வீரமோகன் தலைமை தாங்கினார். தமிழ்த்துறை தலைவர் சேதுபதி நோக்கவுரை ஆற்றினார்.
செய்தி மற்றும் விளம்பரத்துறை மக்கள் தொடர்பு உதவியாளர் அமலோற்பவமேரி, வாசிப்பை நேசிப்போம் தலைப்பில் மாணவர்களிடையே வாசிப்பின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
துணை பேராசிரியர் ராஜலட்சுமி அறிமுகவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில், கல்லுாரி மாணவிகள் கோமதி, அருள்மொழி, பிரியதர்ஷினி, லத்திகா, தேவதர்ஷினி, அழகரசி, கிருத்திகா ஆகியோர் நுால்களும் வாசிப்பு அனுபவங்களும் குறித்து கருத்துரை வழங்கினர்.
மாணவி தர்ஷினி நன்றி கூறினார்.
இதில், 100க்கும் மேற்பட்ட மாணவியர், துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் ராஜலட்சுமி, சந்திரா, வஜ்ரவேலு ஆகியோர் செய்திருந்தனர்.