ADDED : நவ 28, 2026 10:45 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் நிரவி காவல் நிலைய சிறப்பு நிலை சப் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் நேற்று (நவ.,27) விழிதியூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது விழிதியூர் சாலையில் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர்.
அவர், விழிதியூர் கருணாநிதி, 37, என்பது தெரிய வந்தது. அவர் மீது நிரவி போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். அவரிடம் இருந்த கத்தியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
