தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காங்., எம்.பி.,க்கு மிரட்டல்: அரசு ஊழியர் கைது

 காங்., எம்.பி.,க்கு மிரட்டல்: அரசு ஊழியர் கைது

 காங்., எம்.பி.,க்கு மிரட்டல்: அரசு ஊழியர் கைது


ADDED : பிப் 26, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2026 04:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வில்லியனுார்: புதுச்சேரி காங்., எம்.பி., வைத்திலிங்கத்திற்கு மிரட்டல் விடுத்த அரசு ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரியில் சமீபத்தில் காங்., மற்றும் பா.ஜ., கட்சி நிர்வாகிகள் மோதிக்கொண்டனர். பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும், காங்., கட்சியை கண்டித்தும் கடந்த சில தினங்களுக்கு முன், உளவாய்க்கால் பகுதியை சேர்ந்த பத்திரப் பதிவு அலுவல ஊழியர் சந்திரசேகர், 57;என்பவர், ஆடியோ ஒன்றை வெளியிட்டார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.

அதில்,காங்.,முன்னாள் தலைவர் சோனியா,ராகுல் ஆகியோரை கடுமையாக விமர்சித்தும், இலங்கை இனபடுகொலைக்கு காங்., கட்சி தான் காரணம் என்றும்,திருப்பரங்குன்றம் தீபம் ஏற்ற தடை செய்ய வேண்டும் என,கையெழுத்து போட்ட காங்., எம்.பி.,வைத்தியலிங்கத்தையும் ஆபாசமாக பேசி, மிரட்டல் விடுத்து பேசியிருந்தார்.

ஆடியோவை ஆதாரமாக கொண்டு வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார், ஆபாசமாக திட்டுதல், பிரிவினை உருவாக்குதல், மிரட்டல், பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல் மற்றும் அவதுாறாக பேசுதல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் சந்திரசேகர் மீது,வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us