/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தம்பதியை தாக்கிய மூவருக்கு வலை
/
தம்பதியை தாக்கிய மூவருக்கு வலை
ADDED : ஜன 07, 2026 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சேதராப்பட்டு, மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமு, 36. இவரது வீட்டில் பிளம்பர் மற்றும் கொத்தனார் வேலை நடந்து வருகிறது. அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் பிளம்பர் வேலை செய்த கிருஷ்ணராஜிடம் தகராறு செய்தார். அதை,ராமு அவரது மனைவி அனிதா தட்டி கேட்டனர்.
ஆத்திரமடைந்த, அண்ணாதுரையின் மகன்கள் சேரன், கரிகாலன், அகிலன் ஆகியோர் ராமு மற்றும் அவரது மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், சேரன் உட்பட மூவர் மீது சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து, தேடி வருகின்றனர்.

