ADDED : ஜன 10, 2025 05:53 AM
பாகூர்: கடலுார் அடுத்த வெள்ளப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து 34: கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மாலை பாகூர் அடுத்த குருவிநத்தம், சித்தேரி அணைக்கட்டு பகுதியில் உள்ள தனியார் மதுக்கடையில் தனது நண்பர்களுடன் மது குடிக்க சென்றார்.
அப்போது, அவருக்கும்,அங்கு மது அருந்திக் கொண்டிருந்த மற்றொரு ஒரு கும்பலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரமடைந்த அந்த கும்பல் முத்து மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றது. படுகாயம் அடைந்த முத்து ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், பாகூர் போலீசார் கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து,இரண்டாயிரவிளாகம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் 24; குருவி நத்தம் ராஜேஷ், 34; ரஞ்சித், 26, ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

