/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் மூவர் கைது
/
ஜிப்மர் ஒப்பந்த ஊழியர் கொலை வழக்கில் மூவர் கைது
ADDED : பிப் 14, 2024 03:34 AM

புதுச்சேரி : ஜிப்மர் ஒப்பந்த ஊழியரை அடித்து கொலை செய்த வழக்கில் மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி பீச்சவீரன்பேட், வடக்கு வாய்க்கால் வீதியைச் சேர்ந்தவர் அமுது ஆனந்தன், 28; ஜிப்மர் மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்.
கடந்த 10ம் தேதி இரவு அவரது நண்பர்களான உழவர்கரை பிரவீன், பீச்சவீரன்பேட்டை முகிலன், வயல்வெளியைச் சேர்ந்த லெனின் ஆகியோருடன், மேரி உழவர்கரை ஜான்குமார் நகர் அடுத்துள்ள அற்புத அவென்யூ எதிரில் மதுகுடித்து கொண்டிருந்தனர்.
இவர்கள் பக்கத்தில் அதிக சத்ததுடன் மது குடித்து கொண்டிருந்த தர்மாபுரி, வாட்டார் டேங்க் வீதியைச் சேர்ந்த செந்தில்நாதன் (எ) மண்டசெந்தில், 26; பத்துக்கண்ணு சந்திப்பு, நடு ஏரிக்கரை வீதியைச் சேர்ந்த பிரேம்குமார் (எ) பிரேம், 29; தர்மாபுரி இளையா, 25 ஆகியோரை அமுது ஆனந்தன் தட்டி கேட்டார்.
இதனால் இரு தரப்பிற்கும் இடையே தகராறு ஏற்பட்டு தள்ளுமுள்ளு நடந்தது. அங்கிருந்து மண்டசெந்தில், பிரேம், இளையா ஆகியோர் புறப்பட்டு சென்றனர்.
சில நிமிடத்தில் மண்டசெந்தில், பிரேம், இளையா, தர்மாபுரி வழுதாவூர் மெயின்ரோட்டைச் சேர்ந்த ஜானகிராமன் (எ) ஜானி, 24; உட்பட சிலருடன் மீண்டும் அதே இடத்திற்கு வந்து, அமுது ஆனந்தனை சராமாரியாக தாக்கினர்.
மண்ட செந்தில் தான் கொண்டு வந்த கத்தியால், அமுது ஆனந்தன் தலையில் வெட்டினார். ரத்த வெள்ளத்தில் விழுந்த அமுது ஆனந்தனை அவரது நண்பர்கள் மீட்டு கதிர்காமம் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சை பலனின்றி 11ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அமுது ஆனந்தனை கொலை செய்த மண்டசெந்தில், பிரேம், ஜானகிராமன் ஆகியோரை சப்இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்து, 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

