/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்தல் கண்டக்டர் உட்பட 3 பேர் கைது
/
அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்தல் கண்டக்டர் உட்பட 3 பேர் கைது
அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்தல் கண்டக்டர் உட்பட 3 பேர் கைது
அரசு பஸ்சில் மதுபாட்டில் கடத்தல் கண்டக்டர் உட்பட 3 பேர் கைது
ADDED : பிப் 16, 2025 03:15 AM
திண்டிவனம் : புதுச்சேரியில் இருந்து அரசு பஸ்சில் மது பாட்டில்கள் கடத்தி வந்தது தொடர்பாக கண்டக்டர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து வேலுார் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ்சில் சத்தியமங்கலம் பள்ளத் தெருவைச் சேர்ந்த சந்திரன் கண்டக்டர் பணியில் இருந்தார். பஸ் நேற்று பிற்பகல் 2:00 மணிக்கு திண்டிவனம்-புதுச்சேரி சாலை ஐமெட் மருத்துவமனை அருகில் வந்த போது, விபத்தில் சிக்கியது.
உடன், பஸ்சில் இருந்த 3 பார்சல்களை ஒருவர் அவசர அவசரமாக இறக்கினார். அப்போது, அங்கிருந்த போலீஸ் ஒருவர், அந்த நபரை பிடித்து பார்சலை சோதனை செய்த போது, 151 மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது.
கண்டக்டர் இருக்கையை சோதனை செய்தபோது, அவரிடமும் மதுபாட்டில் இருந்தது தெரிந்தது.
தொடர்ந்து, பிடிபட்ட அரக்கோணம் தாலுகா புளிப்பாக்கம் ஏழுமலை மகன் நவீன், 23; அரசு பஸ் கண்டக்டர் சந்திரன்,52; ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்களை அரசு பஸ்சில் ஏற்றிய, பார் ஊழியர் புதுச்சேரி பார்த்திபன் என்பவரும் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.