/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்லுாரி மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு நண்பர், காதலன் உட்பட மூவர் கைது
/
கல்லுாரி மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு நண்பர், காதலன் உட்பட மூவர் கைது
கல்லுாரி மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு நண்பர், காதலன் உட்பட மூவர் கைது
கல்லுாரி மாணவியை மிரட்டி நகை, பணம் பறிப்பு நண்பர், காதலன் உட்பட மூவர் கைது
ADDED : ஜன 03, 2026 05:17 AM
காரைக்கால்: காரைக்கால் கல்லுாரி மாணவியை மிரட்டி பணம், நகை பறித்த அவரது நண்பர் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, காரைக்கால், கோட்டுச்சேரி, கீழகாசாகுடி பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.
இவருடன் இன்ஸ்டாகிராமில் பழகிய திருப்பூர், வஞ்சிபாளையம் பகுதியை சேர்ந்த பாலா, 25, என்ற வாலிபர், தான் கல்லுாரியில் படித்து வருவதாக தெரிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் மாணவி மொபைல் போன் உடைந்துள்ளது. இதனால் மாணவியின் நண்பரான திருநள்ளாறு பகுதியை சேர்ந்த சக்திவேல், 19, என்பவர் அவருக்கு குறைந்த விலையில் மொபைல் போன் வங்கி கொடுத்தார்.
அதையடுத்து, அம்மாணவி, பாலாவிடம் பேசி வந்தார். அப்போது பாலா மாணவியிடம் உனது நிர்வாண புகைப்படம் அனுப்புமாறு கூறியுள்ளார். இதனால் மாணவி அரை நிர்வாண புகைப்படம் ஒன்றை தனது நண்பர் சக்திவேல் ஐடி., மூலம் பாலாவிற்கு அனுப்பினார்.
இந்நிலையில், பாலா தனக்கு செலவுக்கு பணம் வேண்டும் என, மாணவியிடம் கேட்டுள்ளார். இல்லை என்றால் சமூக வலைத்தளத்தில் அரை நிர்வாண புகைப்படத்தை வெளியே விடுவதாக மிரட்டினார்.
இதனால் பலமுறை சிறு சிறு தொகையாக 50 ஆயிரம் ரூபாயை மாணவி தனது நண்பர் சக்திவேல் உதவியுடன் பாலாவுக்கு பணம் அனுப்பினார்.
பின், பாலா மாணவியிடம் பேசுவதை நிறுத்திவிட்டார். இந்நிலையில் சக்திவேல், மாணவியிடம் உனது அரை நிர்வாணம் புகைப்படம் வைத்திருப்பதாகவும் தனக்கும் பணம் தர வேண்டும் என, மிரட்டி, 20 ஆயிரம் ரூபாயை பறித்துள்ளார்.
இதையறிந்த சக்திவேலின் நண்பர் திருநள்ளாறு பகுதியை சேர்ந்த லோகேஷ், 20, என்பவர் கல்லுாரி மாணவி இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் அரை நிர்வாண புகைப்படம் அனுப்பி தனக்கு செலவுக்கு பணம் தேவை என்று மிரட்டி, அவரிடம் இருந்து ஐந்தரை சவரன் தங்க நகையை பறித்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவி காரைக்கால் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தார்.
அதன்பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து, பாலா மற்றும் மாணவியின் நண்பர் சக்திவேல், அவரது நண்பர் லோகேஷ் ஆகியோரை நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

