/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூன்று பைக்குகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
/
மூன்று பைக்குகள் திருட்டு மர்ம நபர்களுக்கு வலை
ADDED : நவ 26, 2024 06:24 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பல்வேறு இடங்களில், 3 பைக்குகளை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தவளக்குப்பம் அடுத்த நல்லவாடு பகுதியை சேர்ந்தவர் திருக்குமரன், 45; ரேஷன் கடை ஊழியர். இவரது பி.ஒய்.ஏ.இ. 2381 என்ற பைக்கை, கடந்த 1ம் தேதி பஸ் நிலையம் அருகே நிறுத்தி சென்றார். மாலை வந்து பார்க்கும் போது, பைக் காணாமல் போயிருந்தது.
அதே போல, புதுசாரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த விமல்ராஜ், 39; இவரது பைக்கை, கடலுார் சாலை கோர்ட்டு அருகே நிறுத்தி சென்றார். மேலும், முத்திரையர்பாளையத்தை சேர்ந்த தமிழ்வேந்தன், 28; இவர் தனது பைக்கை, கடந்த 21ம் தேதி, திருவள்ளுவர் சாலையில் நிறுத்தி சென்றார். பின்னர் வந்து பார்க்கும் போது, பைக்குகள் காணாமல் போயிருந்தன.
இது குறித்து, 3 பேர் கொடுத்த புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, பைக்குகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

