ADDED : நவ 10, 2026 09:24 PM
காரைக்கால்: பாரில் கேஷியரை தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.
நல்லாத்துார் பகுதியில் உள்ள பாரில் கேஷியராக பணியாற்றி வருபவர் நாகப்பட்டினம், கணபதிபுரம், சன்னதி தெரு சரவணன், 39.
இவர், நேற்று (நவ.,9) பாரில் பணியில் இருந்தபோது, மயிலாடுதுறை செருதியூர் சதீஷ்பாபு, சரத்குமார், பிரசாந்த் ஆகியோர் மது வாங்க வந்தனர். அப்போது பாரில் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு மதுபானம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த சதீஷ்பாபு, சரவணனை திட்டினார். இதனை தட்டிக்கேட்ட சரவணனை சதீஷ்பாடு உள்ளிட்ட மூவரும் தாக்கினர். காயமடைந்த சரவணன் அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர், அளித்த புகாரின்பேரில் நெடுங்காடு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ்பாபு, சரத்குமார், பிரசாந்த் ஆகியோரை தேடி வருகின்றனர்.
