UPDATED : நவ 10, 2026 09:09 PM
ADDED : நவ 10, 2026 09:06 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ஓட்டல் தொழிலாளி வலிப்பு ஏற்பட்டு இறந்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மூலக்குளம் ஜே.ஜே., நகரை சேர்ந்தவர் நிர்மல் அந்தோன்,32; ஓட்டலில் வேலை செய்து வந்தார். இதய நோய் தொடர்பாக, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த 8ம் தேதி இரவு வீட்டில் துாங்க சென்றார். அப்போது, அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.
வீட்டில் இருந்தவர்கள் அவரை மீட்பு, இந்திராகாந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர் பரிசோதித்து அவர், இறந்ததை உறுதி செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில், ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
