ADDED : நவ 12, 2024 07:44 PM

புதுச்சேரி; காலாப்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, மூலிகை தோட்டம் திறப்பு, சிட்டுக்குருவி தினம் ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
தலைமை ஆசிரியை கனிமொழி பிரேம் வரவேற்றார்.
வட்டம்-1, பள்ளி துணை ஆய்வாளர் குலசேகரன் தலைமை தாங்கி, மூலிகை தோட்டத்தினை திறந்து வைத்தார்.
பாரூக் மரைக்காயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் பிரேம்குமார் ஜூலியன், அறிவியல் கண்காட்சியை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் நிலை -2 சுவாமிராஜ் வாழ்த்தி பேசினார்.
பசுமை இயக்க நிறுவனர் அருண், மாாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிட்டுக்குருவிகளை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை விளக்கி, சிட்டுக்குருவி கூடுகளை வழங்கினார்.
கண்காட்சியில், மாணவர்களின் 200க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.ஏற்பாடுகளை ஆசிரியைகள் இந்துமதி, பிரியா, ஜமுனா ராணி, சித்ரா, காயத்ரி, ஸ்ரீவிஜயசேகரி, கவுரி, பிரேமா, சந்தியா, சரஸ்வதி, கீதா மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

