/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூவரிடம் ரூ. 1.65 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
/
மூவரிடம் ரூ. 1.65 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
மூவரிடம் ரூ. 1.65 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
மூவரிடம் ரூ. 1.65 லட்சம் மோசடி சைபர் கிரைம் கும்பல் கைவரிசை
ADDED : மார் 20, 2024 02:26 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் மூவரிடம் 1.65 லட்சம் ரூபாய் மோசடி செய்த சைபர் கிரைம் குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியை சேர்ந்தவர் எட்வின் விமல்ராஜ். இவரை மொபைல் போன் மூலம் தொடர்பு கொண்ட நபர், போலந்து நாட்டில் வேலை இருப்பதாகவும், அதற்கு விசா உள்ளது. முன்பணம் அனுப்ப வேண்டும் என கூறினார். அதை நம்பி, அவர், கூகுள் பே மூலம் 1.36 லட்சம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
அதே போல், ஜரீனா என்பவரை போன் மூலம் தொடர்பு கொண்டு பேசிய நபர், தனியார் நிதிநிறுவன அதிகாரி போல பேசினார்.
குறைந்த வட்டிக்கு பணம் தருவதாக, அதற்காக செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என கூறினார். அதை நம்பி அவர், 17 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார்.
புதுச்சேரியை சேர்ந்த சுகந்தன் என்பவர் பெயரில் போலி இன்ஸ்ட்ரா கிராம் துவங்கி, அவரது நண்பர் ஆபத்தில் உள்ளார் அதற்காக அவசரமாக பணம் அனுப்ப வேண்டும் என, மெசேஜ் அனுப்பினர். அதை நம்பி சுகந்தன் 12 ஆயிரம் அனுப்பி ஏமாந்தார். இது குறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

