/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டிய மூன்று பேர் கைது
ADDED : மார் 29, 2025 03:46 AM
அரியாங்குப்பம்: கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியாங்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் அரியாங்குப்பம் சாலையில் ரோந்து சென்றனர்.
அங்கு 3 பேர், கத்தி காட்டி, அவ்வழியாக செல்லும் பொதுமக்களை மிரட்டி வந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அதில், மணவெளியை சேர்ந்த ஆன்ந்த, 33; சம்பத்குமார், 34; பாலா, 19, ஆகியோர் என்பது தெரியவந்து.
இவர்கள் மீது, அரியாங்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில், கஞ்சா, லாட்டரி சீட் விற்பனை, அடிதடி, வழிப்பறி செய்வது உள்ளிட்ட வழக்குகள் உள்ளது.
3 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.
அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.