/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது
/
மூவர் கொலை வழக்கு: 10 பேர் கைது
ADDED : பிப் 16, 2025 03:41 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று வாலிபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி உள்ளிட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி, ரெயின்போ நகரில் நேற்று முன்தினம் ரவுடி ரஷி உள்ளிட்ட மூவர் கொலை செய்யப்பட்டனர்.
இவ்வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சத்யா, சஞ்சீவி,22:, சரண்,20; சக்திவேல் 21, விஷ்ணு 20, சாரதி 24, வெங்கடேசன் 25, ரவிந்திரகுமார் 20, காமேஷ் 28 மற்றும் 17 வயது சிறுவன் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்.
அதில், இந்த கொலை வழக்கில் மேலும், ,சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.