ADDED : ஏப் 23, 2026 11:34 PM

அ நிறம் | அளவு
புதுச்சேரி: தியாகராஜ சுவாமிகள் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா எல்லைபிள்ளைச்சாவடி சாரதாம்பாள் கோவில் வளாகத்தில் நடந்தது.
சத்குரு தியாகராஜ சுவாமிகள் 51ம் ஆண்டு ஜெயந்தி விழா எல்லைபிள்ளைச்சாவடி சாரதம்பாள் கோவல் சிருங்கேரி சிவங்கா மடத்தில் துவங்கி வரும் 26ம் தேத வரை நடக்கிறது. துவக்க நிகழ்ச்சியில், சாரதா கலா மந்திர் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து கலைமாமணிகள் ஆனந்த பாலயோகி, பாலமுரளி, விஜயலட்சுமி, பத்மநாபன் குழுவினர்களின் பரதநாட்டியம் நிகழ்ச்சி நடந்தது. பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இன்று மாலை 5 மணிக்கு தியாராஜ சுவாமிகள் உற்சவமும் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு பஞ்சரத்ன கீர்த்தனைகள் நிகழ்ச்சி நடக்கிறது.
