/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவிலில் இன்று தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா
/
சாரதாம்பாள் கோவிலில் இன்று தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா
சாரதாம்பாள் கோவிலில் இன்று தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா
சாரதாம்பாள் கோவிலில் இன்று தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா
ADDED : மே 04, 2025 04:49 AM

புதுச்சேரி : புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, சாரதாம்பாள் கோவிலில், இன்று தியாகராஜ சுவாமிகளின் 258வது ஜெயந்தி விழா நடக்கிறது.
சிருங்கேரி சிவகங்கா மடம் சார்பில் தியாகராஜ சுவாமிகளின் 258வது ஜெயந்தி விழா கடந்த 1ம் தேதி முதல் எல்லைப்பிள்ளைச் சாவடி, சாரதாம்பாள் கோவிலில் நடைபெற்று வருகிறது.
அதில் மூன்றாம் நாளான நேற்று காலை ஸ்ரீகிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை, ஆண்டாள் குழுவினர் இசை அமுதம் நடந்தது. பின்னர், பாரதி அரவிந்த், சங்கரி முருகானந்தம் குழுவினர் மற்றும் ஜெகதீசன் குழுவினர் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
மாலை 5:00 மணிக்கு தியாகராஜர் குழுவினர் மற்றும் முத்துசாமி தீட்சதர் குழுவினர்களின் இசைஅமுதம், காயத்ரி ஜெயராமன் குழுவினர் மற்றும் சுனில் கார்கேயன்வாய்ப்பாட்டு நடந்தது.
தியாகராஜ சுவாமிகளின் 258வது ஜெயந்தி தினமான இன்று காலை 8:00 மணிக்கு தியாகராஜ சுவாமி ஜனன உற்சவம், சண்முகம் குழுவினரின் மங்கல இசை, பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடக்கிறது.
தொடர்ந்து காலை 10:30 மணிக்கு புவனா கார்த்தி குழுவினர் வாய்ப்பாட்டு, என்.எஸ்.எஸ். மிருதங்கம் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் தாளமாலை, கீர்த்திலட்சுமி குழுவினரின் வாய்ப்பாட்டு. மாலை 5:00 மணிக்கு பாலு சுவாமி தீட்சதர் குழுவினர் வயலினிசை, ஜோதிர்மயி, வித்யாசங்கரி குழுவினர் வாய்ப்பாட்டு, ஆனந்த பாலயோகி பவனானி குழுவினர் பாட்டு, சண்முகப்ரியா, ஹரிப்ரியா வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

