/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சாரதாம்பாள் கோவிலில் தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா
/
சாரதாம்பாள் கோவிலில் தியாகராஜ சுவாமி ஜெயந்தி விழா
ADDED : மே 05, 2025 05:10 AM

புதுச்சேரி :புதுச்சேரி, எல்லைப்பிள்ளைச்சாவடி, சாரதாம்பாள் கோவிலில், சிருங்கேரி சிவகங்கா மடம் சார்பில் தியாகராஜ சுவாமிகளின் 258வது ஜெயந்தி விழா நேற்று நடந்தது.
விழா கடந்த 1ம் தேதி மாலை விநாயகர் பூஜையுடன் துவங்கியது. ஸ்ரீராம சீதா லட்சுமண ஆஞ்சநேய சமேத பட்டாபிேஷக தியாகராஜர் ஆவாஹன பூஜை, இசை அமுதம், வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
2ம் தேதி காலை ஸ்ரீபக்த மீரா குழுவினர் இசை அமுதம், புதுச்சேரி மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி குழுவினர் பஜன், பாரதியார் பல்கலைக்கூட மாணவர்களின் இசை அமுதம், நெய்வேலி லலிதா ராஜூலு குழுவினர் பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
மாலை 5:00 மணிக்கு யோகாஞ்சலி நாட்டியாலயா திவ்யப்ரியா பவனானி குழுவினர் இசை அமுதம், தேவசேனா பவனானி குழுவினர் பாட்டு, பானுமதி குழுவினர் வீணை, காயத்ரி கிரீஷ் பாட்டு நிகழ்ச்சி நடந்தது.
3ம் தேதி காலை ஸ்ரீ கிருஷ்ண பிரேமிக பஜனை மண்டலியின் தோடய மங்களம் மற்றும் உஞ்சவ்ருத்தி பஜனை, ஆண்டாள் குழுவினர் இசை அமுதம், பாரதி அரவிந்த், சங்கரி முருகானந்தம் குழுவினர் மற்றும் ஜெகதீசன் குழுவினர் பாட்டு நடந்தது.
மாலை 5:00 மணிக்கு தியாகராஜர் குழுவினர் மற்றும் முத்துசாமி தீட்சிதர் குழுவினர்களின் இசை அமுதம், காயத்ரி ஜெயராமன் குழுவினர் மற்றும் சுனில் கார்கேயன் பாட்டு, சீனிவாசராவ் வயலின், ஸ்கந்த சுப்ரமணியம் மிருதங்கம், முரளி கடம் நடந்தது.
முக்கிய நிகழ்வாக, நேற்று தியாகராஜ சுவாமிகளின் 258 வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு, நேற்று காலை தியாகராஜ சுவாமி ஜனன உற்சவம், பொன் சண்முகம் குழுவினரின் மங்கல இசை, பிரபல இசை கலைஞர்கள் பங்கேற்கும் பஞ்சரத்ன கீர்த்தனைகள் நடந்தது.
காலை 10:30 மணிக்கு புவனா கார்த்தி குழுவினர் பாட்டு, என்.எஸ்.எஸ்., மிருதங்கம் ஆர்ட்ஸ் அகாடமி மாணவர்களின் தாளமாலை, கீர்த்திலட்சுமி குழுவினரின் பாட்டு நடந்தது.
மாலை 5:00 மணிக்கு பாலு சுவாமி தீட்சிதர் குழுவினர் வயலினிசை, ஜோதிர்மயி, வித்யாசங்கரி குழுவினர் பாட்டு, ஆனந்த பாலயோகி பவனானி குழுவினர் பாட்டு, சண்முகப்ரியா, ஹரிப்ரியா வாய்ப்பாட்டு நடந்தது.
இதில், திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

