/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குமரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
/
குமரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
ADDED : நவ 09, 2024 07:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம், : கரிக்கலாம்பாக்கம் வள்ளி தேவசனோ சமேத குமரேஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரர் கோவிலில் கந்தசஷ்டி சூரசம்ஹாரம் விழா கடந்த 2ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இதையொட்டி, தினமும் சுவாமிக்கு காலை சிறப்பு அபி ேஷக ஆராதனைகளும், இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு சூரசம்ஹாரம் நடந்தது. நேற்று இரவு குமரேஸ்வரர்-வள்ளி தெய்வாணை திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக மாலை மாற்றுதல், சீர்வரிசை கொண்டு வருதல் நடந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நாளை காலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.