/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
/
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம்
ADDED : பிப் 25, 2024 04:45 AM

வில்லியனுார் : திருக்காஞ்சி மாசிமக தீர்த்தவாரியில் கவர்னர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
வில்லியனுார் அடுத்த திருக்காஞ்சி கங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் மாசி மக தீர்த்தவாரி திருவிழா கடந்த 15ம் தேதி துவங்கியது.
முக்கிய நிகழ்வாக 18ம் தேதி பரி வேட்டை, 22ம் தேதி திருக்கல்யாணம், 23ம் தேதி தேர் திருவிழா நடந்தது.
மாசி மக தீர்த்தவாரி உற்சவத்தை முன்னிட்டு, நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் சங்கராபரணி ஆற்றில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபட்டனர்.
காலை 9:30 மணிக்கு மேல் நடந்த தீர்த்தவாரியில் உறுவையாறு, மங்கலம், ஆரியூர், கரிக்கலாம்பாக்கம், புதுக்கடை, கிளிஞ்சிகுப்பம், கோனேரிக்குப்பம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவில் கவர்னர் தமிழிசை, வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டர்.
அதேபோல், ஒதியம்பட்டு காசி விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் சார்பில், நேற்று காலை சங்கராபரணி ஆற்றின் வடபுறத்தில் அதிகார நந்தி காமாட்சியுடன் மாசி மக தீர்த்தவாரி உற்சவம் நடந்தது.
வில்லியனுார், ஒதியம்பட்டு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சுவாமிகள் தீர்த்தவாரியில் பங்கேற்றன.