/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஆன்லைன் கேம் முதலீடு மோசடி: திருநெல்வேலி ஆசாமி கைது
/
ஆன்லைன் கேம் முதலீடு மோசடி: திருநெல்வேலி ஆசாமி கைது
ஆன்லைன் கேம் முதலீடு மோசடி: திருநெல்வேலி ஆசாமி கைது
ஆன்லைன் கேம் முதலீடு மோசடி: திருநெல்வேலி ஆசாமி கைது
ADDED : அக் 29, 2025 09:20 AM

புதுச்சேரி: ஆன்லைன் கேமில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக்கி தருவதாக கூறி ரூ. 3.60 லட்சம் மோசடி செய்த திருநெல்வேலி வாலிபரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியைச் சேர்ந்த வினோதன் என்பவரை, இன்ஸ்டாகிராம் மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஆன்லைன் கேமில் பணம் முதலீடு செய்தால், இரட்டிப்பு லாபம் தருவதாக கூறினார். இதனை நம்பி வினோதன் மர்மநபருக்கு பல்வேறு தவணைகளாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் முதலீடு செய்து ஆன்லைன் கேம் விளையாடினார்.
ஆனால், மர்ம நபர் கூறிய லாபம், வினோதனுக்கு வரவில்லை. இதுகுறித்து வினோதன் அளித்த புகாரின் பேரில், சைபர் கி ரைம் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இதில், ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் திருநெல்வேலியை சேர்ந்த சுதர்சன், 22; என்பவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அவரது கணக்கில் 6 மாதத்திற்குள் ரூ.1.35 கோடி வரை பண பரிவார்த்தனை நடந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ் ணன், எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் தலைமையிலான அருண்குமார், ரோஸ்லின்மேரி, அபிநயா, அரவிந்தன், அருள்மணி, ராஜ்கு மார் அடங்கிய தனிப்படையினர் திருநெல்வேலி சென்று சுதர்சனை நேற்று பிடித்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
பின், அவரிடம் நடத்திய விசாரணையில், இன்ஸ்டாகிராமில் போலி கணக்கு துவங்கி ஆன்லைன் கேமிங் மூலம் பணம் இரட்டிப்பாக்கும் விளையாட்டு குறித்த விளம்பரத்தை வெளியிட்டு, 13 பேரை ஏமாற்றியது தெரியவந்தது. உடன், அவரை போலீசார் கைது செய்து, மொபைல், ஏ.டி.எம்., கார்டு பறிமுதல் செய்தனர். சுதர்சனை புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாபட்டு சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளதால், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக எஸ்.பி., ஸ்ருதி யாரகட்டி கூறினார்.
குற்றவாளியை விரைந்து கைது செய்த போலீசாரை, எஸ்.பி., பாராட்டினார்.

