UPDATED : அக் 06, 2026 01:28 AM
ADDED : அக் 06, 2026 01:26 AM
புதுச்சேரி: திருப்பதி மற்றும் சென்னை எழும்பூருக்கு புதுச்சேரிக்கு வரும் ரயில் நாளை ரத்து செய்யப் படுகிறது.
திருச்சி தென்னக ரயில்வே கோட்ட பகுதியில் இன்ஜினீயரிங் பணிகள் நடக்கிறது. அதனால் ரயில் சேவைகள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி திருப்பதி – புதுச்சேரி இடையே மெமு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
திருப்பதியில் இருந்து நாளை 7ம் தேதி அதிகாலை 4:10 மணிக்கு புதுச்சேரிக்கு வரும் ரயில் விழுப்புரம் வரை இயக்கப்படும். இந்த ரயில் விழுப்புரம் – புதுச்சேரி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல் புதுச்சேரி – சென்னை எழும்பூருக்கு மதியம் 3:35 மணிக்கு இயக்கப்படும் மெமு பயணிகள் ரயில் நாளை 7ம் தேதி விழுப்புரத்தில் இருந்து மாலை 4:10 மணிக்கு சென்னைக்கு புறப்படும். இந்த ரயில் புதுச்சேரி – விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை திருச்சி தென்னக ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
