/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சேலியமேட்டில் இருந்து திருப்பதி பாத யாத்திரை
/
சேலியமேட்டில் இருந்து திருப்பதி பாத யாத்திரை
ADDED : டிச 18, 2025 05:12 AM
பாகூர்: சேலியமேடு கிராமத்தில் இருந்து, 31ம் ஆண்டாக, திருப்பதிக்கு பக்தர்கள் பாதயாத்திரையாக வரும் 20ம் தேதி புறப்படுகின்றனர்.
பாகூர் அடுத்த சேலியமேடு கிராமத்தில் பக்த ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில், இருந்து ஆண்டு தோறும் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து, திருப்பதிக்கு பாதயாத்திரை சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.
அதன்படி, 31ம் ஆண்டாக திருப்பதிக்கு வரும் 20ம் தேதி பக்தர்கள் பாதயாத்திரை சென்று, பெருமாளை தரிசிக்க உள்ளனர்.
சேலியமேடு ஆஞ்சநேயர் கோவிலில் இருந்து அதிகாலை 3:00 மணிக்கு பாதயாத்திரை புறப்படும் பக்தர்கள், வழுதாவூர், கூட்டேரிப்பட்டு, வந்தவாசி, காஞ்சிபுரம், திருத்தணி, நகரி, புத்துார், திருச்சானுார் வழியாக திருப்பதி சென்று, வரும் 25ம் தேதி சுவாமி தரிசனம் செய்ய உள்ளனர்.
ஏற்பாடுகளை, சேலியமேடு திருமலை திருப்பதி பாதயாத்திரை குழுவினர் செய்துள்ளனர்.

