/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்
/
ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்
ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்
ஒப்பந்த அங்கன்வாடி ஊழியர்களை பணியில் அமர்த்த வலியுறுத்தல்
ADDED : டிச 18, 2025 05:12 AM
புதுச்சேரி: ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களை, அந்தந்த அங்கன்வாடி மையங்களில் பணியில் அமர்த்திட வேண்டும் என, அ.தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.
அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை;
புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியிடங்களுக்கு, புதிதாக ஆட்கள் தேர்வு செய்வதால்,ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் அங்கன்வாடி ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 600க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியிடங்களுக்கு பிளஸ் 2 கல்வி தகுதியாக நிர்ணயம் செய்து, தேர்வு நடைபெற உள்ளது.
தற்போது, ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரியும்,அங்கன்வாடி மையங்களில், ஆசிரியர் மற்றும் உதவியாளர்கள் பணியிடங்களை காலிப் பணியிடங்களாக அரசு கருத்தில் கொண்டு, அந்த இடங்களிலும் புதிய பணியாளர்களை தேர்வு செய்யமுடிவு எடுத்திருப்பது நியாயமற்ற செயல்.
ஏற்கனவே, பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்களை கொண்டு, அந்த இடத்தை பூர்த்தி செய்வது சரியான நடவடிக்கையாகும். அதைவிடுத்து, அந்த இடங்களிலும் புதிய ஊழியர்களை தேர்வு செய்வது என்பது மனிதாபிமானமற்ற செயல்.
எனவே, முதல்வர், இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்து, ஏற்கனவே பணியில் உள்ள ஒப்பந்த ஊழியர்களை தற்போது வேலை செய்யும் அந்தந்த அங்கன்வாடி மையங்களில் பணியில் அமர்த்த வேண்டும்.
அவர்கள் பணி செய்யும் அங்கன்வாடி மையங்களுக்கு புதிதாக பணியாளர்களை தேர்வு செய்யும் ஆணையை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

