தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/திருவண்ணாமலை 7

திருவண்ணாமலை 7

திருவண்ணாமலை 7


UPDATED : நவ 23, 2026 08:58 PM

ADDED : நவ 23, 2026 08:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:58 PM ADDED : நவ 23, 2026 08:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

22.11.26/தி.மலை/என்.ஆர்.பூவேந்திரன்/98940 09140//

திருவண்ணாமலை: கார்த்திகை தீபம்:

திருவாரூரில் பிறக்க முக்தி, சிதம்பரத்தில் தரிசிக்க முக்தி, காசியில் இறக்க முக்தி, திருவண்ணாமலையை நினைக்க முக்தி என்பது அருணகிரி நாதர் வாக்கு. தீபம் ஏன்றால் நினைவுக்கு வருவது, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், சிவபெருமான் ஜோதிப்பிழம்பாக கார்த்திகை மாத பவுர்ணமி நாளில், அண்ணாமலையாக உருவெடுத்தார். அதனால், இந்த தலத்தில் தீப திருவிழா உலக புகழ்பெற்று விளங்குகிறது.

பரணி தீபம்:

அருணாசலேஸ்வரர் மூல கருவறை எதிரில், அதிகாலை, 4:00 மணி அளவில் பரணி நட்சத்திர நேரத்தில் ஏற்றப்படும்.

ஏகன் அனேகன் என்பதை விளக்கும் வகையில், மூலவர் சன்னதியில் ஒரு தீபம் ஏற்றி, அதிலிருந்து, 5 பெரிய அகல்விளக்குகளில் தீபம் ஏற்றப்படும். இவை, நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய, 5 பூதங்களையும், படைத்தால், காத்தல், அழித்தல், அழித்தல், மறைத்தல் அருளல், ஆகியஇறைவனின் பஞ்ச பூதங்களை குறிக்கும். பரணி தீப தரிசனம் என்பது பரம்பொருளின் அருளை நேரடியாக பெறுவதற்கு சமம்.

மஹா தீபம்:

மாலை, 6:00 மணிக்கு அனேகன் ஏகன் என்பதை விளக்கும் வகையில், காலையில் ஏற்றப்பட்ட பரணி தீபத்தை ஒன்றாக்கி, 2,668 அடி உயர மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்படும். இவை, 40 கி.மீ துாரம் வரை தெரியும். இதை கண்டு தரிசிப்பவர்களுக்கு, 21 தலைமுறையில் செய்த பாவம் விளகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவண்ணாமலையில் வாழ்ந்த மகான்கள்

திருவண்ணாமலை என்னும் ஆன்மீக பூமி, ஞான மார்க்கத்தை அளிக்கவல்லது. அதனால், பல மகான்களையும், சித்தர்களையம் தன் பால் ஈர்த்து வந்துள்ளது. கந்தர் அநுபூதி தந்த அருணகிரிநாதர், முருகப்பெருமானின் அருள் பெற்று தன் வாழ்வையே ஆன்மீக அர்ப்பணிப்பாக்கிய தலம் இது. ரமண மகரிஷி தம் இளம் வயதிலேயே திருவண்ணாமலைக்கு வந்து பல ஆண்டுகள் தவமிருந்து, நான் யார்? என்ற ஆத்ம பலத்தை உலகிற்கு உபதேசித்தார். மேலும், சேஷாத்திரி சுவாமிகள், விசிறி சாமியார் என அழைக்கப்படும் யோகிராம் சுரத்குமார், குகை நமச்சிவாயர், விருபாட்சியார், ஈசான்ய ஞான தேசிகர், அம்மணி அம்மாள், போன்ற எண்ணற்ற சித்தர்கள் வாழ்ந்த தலம். இன்றும் பல யோகிகள், அருவமாக இத் தலத்தல் தவம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us