UPDATED : நவ 23, 2026 08:52 PM
ADDED : நவ 23, 2026 08:52 PM
22.11.26/தி.மலை/என்.ஆர்.பூவேந்திரன்/98940 09140//
திருவண்ணாமலை கோவில் கோபுர வரலாறு
1. கிழக்கு இராஜகோபுரம்:
கி.பி. 1513- -1514-ல் கிருஷ்ணதேவராயர் தான் தொடங்கினார். 1529 - ல் கிருஷ்ண தேவராயரின் ஆட்சி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, பின்னர் விஜயநகரப் பேரரசின் தஞ்சை நாயக்க மன்னர் செவ்வப்ப நாயக்கரால் கிழக்கு ராஜகோபுரத்தை 1590 -ல் கட்டி முடித்தார். பிரதான கிழக்கு இராஜ கோபுரமானது 217 அடி உயரம் கொண்டதாகும். தமிழகத்தின் இரண்டாவது உயர்ந்த கோபுரம் என்ற பெருமை பெற்றுள்ளது. இக்கோபுரம் 11 நிலைகளைக் கொண்டதாகும்.
2. வள்ளாள மஹாராஜா கோபுரம்,
1318-ம் ஆண்டு தொடங்கி, 1340-ம் ஆண்டு வரை, இந்த கோபுரத்திற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்றுள்ளதாக கல்வெட்டு குறிப்புகள் சொல்கின்றன. இதனை கட்டியவர். வீர வல்லாள மகாராஜா. கிழக்கு இராஜகோபுரத்தைத் தாண்டியதும் வருவது இந்த கோபுரம் தான். கீழ் பகுதி தூண் ஒன்றில் வல்லாள மகாராஜாவின் சிற்பனம் கைகூப்பிய நிலையில் இருப்பதைக் காணலாம். இந்த மன்னனுக்கு பிள்ளைகள் இல்லை. இதனால் மனம் வருந்திய மன்னனின் கனவில் சிவபெருமான் தானே மகனாக இருந்து அனைத்து காரியங்களையும் செய்வதாக வாக்களித்தார். அதன்படியே வல்லாள மகாராஜா இறந்த வேலையில், அவருக்கு சிவபெருமானே இறுதி சடங்கை செய்ததாக கூறப்படுகிறது. இன்றும், மாசி மாதம் நடைபெறும் மாசிமகத்தன்று வல்லாள மகாராஜாவிற்கு அண்ணாமலையார் திதி கொடுக்கும் வைபவம் நடைபெறுகிறது.
3. வடக்கு அம்மணி அம்மன் கோபுரம்
வடக்கு அம்மணி அம்மன் கோபுரத்தின் கல்காரம் மட்டும் கி.பி. 1513 –-1514-ல் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. அதன் பின்னர் முழுமையாக கோபுரம் சிவ பக்தையான அம்மணி அம்மாள் என்ற சிவபக்தையினால் கட்டி முடிக்கப்பட்டது. 11 நிலைகள் கொண்டது, 11 கலசங்கள் கொண்டது.
4. - வடக்கு கட்டை கோபுரம், 5 நிலைகளுடன், 5 கலசங்களுடன் கட்டப்பட்டுள்ளது.
5. கிளி கோபுரம்
திருவண்ணாமலை கோவிலில் உள்ள கோபுரங்களிலேயே மிகவும் பழமையானதாக இந்த கோபுரம் கருதப்படுகிறது. இதனை, 1063ஆம் ஆண்டு சோழப்பேரரசர் வீர ராஜேந்திர சோழன் கட்டியுள்ளார். ச81 அடி உயரம் கொண்டது இந்த கோபுரம். வல்லாள மகாராஜா கோபுரத்திற்கு அடுத்தப்படியாக இருக்கிறது. முருகப்பெருமானின் புகழைப்பாடிய அருணகிரிநாதார் பிறந்த திருத்தலம் இது. இப்பகுதியை ஆண்ட மன்னனுக்கு ஏற்பட்ட நோயைத் தீர்க்க தேவலோகத்தில் உள்ள மலர் தேவை என்றும், அதனைக்கொண்டு வர அருணகிரிநாதரால் தான் முடியும் என்றும், மன்னனின் ஆலோசகராக இருந்த சம்பந்தாண்டான் கூறினார். இதனை நம்பி கூடுவிட்டு கூடு பாயும் வித்தையால், தன்னுடைய ஆன்மாவை, இறந்து போது ஒரு கிளியின் உடலுக்குள் செலுத்திவிட்டு, தேவலோகம் சென்றார் அருணகிரிநாதர். அதற்குள் அருணகிரிநாதர் மீது பொறாமை கொண்டிருந்த சம்பந்தாண்டனார், அவரது உடலை எரித்துவிட்டான். இதனால் கிளி உருவத்திலேயே அந்த கோபுரத்தில் தங்கினார் அருணகிரிநாதர். இதனால், இக்கோபுரம் கிளிகோபுரம் என்று அழைக்கப்படுகிறது. 7 நிலைகளுடன், 5 கலசங்கள் கொண்டவை.
6. மேற்கு கட்டை கோபுரம், 7 நிலைகளுடன், 5 கலசங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
7. - பேய கோபுரம் ( மேற்கு கோபுரம்)
பேய கோபுரம் என்று அழைக்கிறார்கள். கிழக்கு இராஜகோபுரத்திற்கான பணியை தொடங்கியபோதே, மேற்கு கோபுரத்திற்கான பணியையும் கி.பி. 1513- –1514-ல் கிருஷ்ணதேவராயர் தான் தொடங்கினார். ஆனால், இதனை கட்டி முடித்தது தஞ்சை செவ்வப்ப நாயக்கர் என்பவர் ஆவார். 9 நிலைகளுடன், 9 கலசங்கள் கொண்டுள்ளன.
8. - தெற்கு கட்டை கோபுரம்
தெற்கு கட்டை கோபுரம், 5 நிலைகளுடன், 5 கலசங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன.
9. திருமஞ்சன கோபுரம் – தெற்கு
திருமஞ்சன கோபுரத்தின் கல்காரம் மட்டும் கி.பி. 1513 –-1514 கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. அதன் பின்னர் முழுமையான கோபுரம், டி.பி. சூரியநாராயண செட்டியார் என்ற சிவனடியாரால் கட்டி முடிக்கப்பட்டதாகும். 9 நிலைகளுடன், 9 கலசங்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளது.
10. ரிஷி கோபுரம்
கி.பி., 11ம் நுாற்றாண்டில், முதலாம் ராஜேந்திர சோழனால், கொடி மரம் அருகில் கட்டப்பட்டுள்ள ரிஷி கோபுரம், 5 கலசங்கள் கொண்டவை.
