தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/போதைப்பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவு

போதைப்பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவு

போதைப்பொருள் தடுப்பு பணியை தீவிரப்படுத்த கலெக்டர் உத்தரவு


UPDATED : நவ 23, 2026 08:32 PM

ADDED : நவ 23, 2026 08:32 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 23, 2026 08:32 PM ADDED : நவ 23, 2026 08:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: புதுச்சேரியில் தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களின் விற்பனையைத் தடுக்கவும், அவற்றை முற்றிலும் ஒழிக்கவும் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம், கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில், காவல்துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை, மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் பங்கேற்று, தங்களது துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினர். இதில், கலெக்டர் பேசுகையில், பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகே போதைப்பொருள் விற்பனை நடைபெறுகிறதா என்பதைத் தீவிரமாகக் கண்காணித்து, தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரியபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பாலங்களின் கீழ் சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் கண்காணிக்கவும், புதுச்சேரிக்கு வரும் ரயில்களில் ரயில்வே போலீசாருடன் இணைந்து சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டும்.

வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள இடங்கள், தனியார் கொரியர் நிறுவனங்கள் ஆகியவற்றைக் போலீசார் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரி உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு அருங்காட்சியகங்களை மாணவர்கள் அதிக அளவில் பார்வையிட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் அறிவுறுத்தினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us