/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
/
புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜூன் 23, 2025 05:07 AM

பாகூர் : கீழ்பரிக்கல்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி அனந்தவேலு வழிகாட்டுதலின் பேரில், உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் முத்துக்கிஷ்ணன் தலைமை தாங்கினார். ஆசிரியர் கார்த்திகேயன் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் மற்றும் புகையிலை ஒழிப்பு மைய மருத்து அதிகாரி தேவி ஆகியோர் புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து பள்ளி வளாகத்தில் இருந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. இதில், மாணவர்கள் பங்கேற்று கீழ்பரிகல்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று புகையிலையின் தீமைகள் குறித்து கிராம மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அரசு நல வழி மைய அதிகாரி மலர்மன்னன், ஏ.என்.எம்., விஜயபாரதி, ஆஷா பணியாளர் தேவி மற்றும் ஆசிரியர்கள் அருண் பிரசாத், தமிழ்செல்வி, சத்தியமுர்த்தி, குபேந்திரன் ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் அறிவாம்பாள் நன்றி கூறினார்.