ADDED : ஜூலை 13, 2025 05:41 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : லாஸ்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை பள்ளியின் முதன்மை முதல்வர் பத்மா கொடியசைத்து துவக்கி வைத்தார். தலைமையாசிரியை கீதா ஊர்வலம் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார்.
ஊர்வலத்தில் 50க்கும் மேற்பட்ட என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்று, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தொடர்ந்து லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் துாய்மை பணியில் ஈடுப்பட்டனர்.
ஏற்பாடுகளை பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வளர்மதி மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
