/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று சிம்ம வாகனத்தில் வீதியுலா
/
வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று சிம்ம வாகனத்தில் வீதியுலா
வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று சிம்ம வாகனத்தில் வீதியுலா
வரதராஜப் பெருமாள் கோவிலில் இன்று சிம்ம வாகனத்தில் வீதியுலா
ADDED : ஜூன் 04, 2025 12:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவில் பிரம்மோற்சவத்தில் இன்று இரவு சுவாமி தங்க சிம்ம வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.
புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 39ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. மூன்றாம் நாளான இன்று 4ம் தேதி பிராமண மரபினரின் உற்வசம் நடக்கிறது.
அதனையொட்டி இன்று காலை 10.௦௦ மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது. மாலை தங்க சிம்ம வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் வேதராமன், ரமேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர்.