/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் பழைய சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
/
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் பழைய சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் பழைய சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
'நீட்' அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள் பழைய சான்றிதழ் கொண்டு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்
ADDED : ஜூன் 07, 2025 02:47 AM
புதுச்சேரி : நீட் அல்லாத சென்டாக் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் காலக்கெடு முடிகிறது. பழைய சான்றிதழ் கொண்டும் விண்ணப்பிக்கலாம் என புதிய சலுகையை சென்டாக் அறிவித்துள்ளது.
நீட் அல்லாத படிப்புகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி முதல் சென்டாக் ஆன்லைனில் விண்ணப்பம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் போட்டி போட்டு விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க 15,196 பேர் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இ.மெயில் மூலம் பதிவு செய்திருந்தனர்.
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்று 7ம் தேதி கடைசி நாள். இன்று மாலை 5:00 மணி வரை சென்டாக் ஆன்லைனில் (www.centacpuducherry.in) விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாணவர்கள் விண்ணப்பிக்க போதுமான காலஅவகாசம் கொடுக்கப்பட்டு விட்டது. எனவே நீட் அல்லாத படிப்புகளுக்கு இன்று விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு மேல் காலக்கெடு நீட்டிக்கப்படாது. புதுப்பிக்கப்பட்ட ஜாதி, குடியுரிமை, குடியிருப்பு உள்ளிட்ட சான்றிதழ்களை இன்னும் வாங்காத மாணவர்கள் பழைய சான்றிதழ்கள் இருந்தால் அவற்றை கொண்டு விண்ணப்பிக்கலாம். மெரிட் லிஸ்ட் வெளியாகும் முன், புதுப்பிக்கப்பட்ட சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.
நீட் அல்லாத யூ.ஜி., தொழில் முறை படிப்புகளாக பி.டெக்., பி.ஆர்க், பி.எஸ்சி., வேளாண்மை மற்றும் தோட்டக்கலை, பி.வி.எஸ்சி., (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி., நர்சிங்., பி.பி.டி., பி.எஸ்சி., துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்
தொழில்முறை டிகிரி, டிப்ளமோ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி.,எஸ்.டி., மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கலை அறிவியல், வணிகவியல், நுண் கலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளிகளுக்கு 150 ரூபாய், இதர பிரிவினருக்கு 300 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். தொழில்முறை டிகிரி மற்றும் டிப்ளமோ படிப்புளுக்கு சேர்த்து விண்ணப்பிக்க எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 500 ரூபாய், இதர பிரிவினருக்கு 1,000 ரூபாய், பிற மாநில மாணவர்களுக்கு 1,500 ரூபாய் செலுத்த வேண்டும். என்.ஆர்.ஐ., மற்றும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு, ஓ.சி.ஐ., மற்றும் ஓ.சி.ஐ., ஸ்பான்சர்டு பிரிவினர் விண்ணப்ப கட்டணமாக 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு 0413-2655570, 2655571 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும்.