/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கமல சாயிபாபா கோவிலில் இன்று புத்தாண்டு விழா
/
கமல சாயிபாபா கோவிலில் இன்று புத்தாண்டு விழா
ADDED : ஜன 01, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : பிள்ளைச்சாவடி கமல சாயிபாபா கோவிலில் புத்தாண்டையொட்டி, சிறப்பு பூஜைகள் நடக்கிறது.
இ.சி.ஆர்., சாலை பிள்ளைச்சாவடி கமல சாயிபாபாப கோவிலில் புத்தாண்டு விழா இன்று காலை 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 6:30 மணிக்கு தரிசனம் ஆரம்பிக்கிறது. தொடர்ந்து 8:30 மணி அபிேஷகம் நடக்கிறது. 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம், பகல் 12:00 மணிக்கு ஆரத்தி நிகழ்ச்சியை அடுத்து அன்னதானம் வழங்கப்படுகிறது.
பின்னர் மாலை 6:30 மணிக்கு பரதநாட்டியம் நிகழ்ச்சி நடக்கிறது. ஏற்பாடுகளை கமல சாயிபாபா கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.